Loading...
 

கல்வி ரீதியான சொற்பொழிவு பேட்டி

 

Education

 

சொற்பொழிவின் கால அளவு

கல்வி ரீதியான சொற்பொழிவு போட்டி மக்களுக்கு அறிவூட்டவும், ஊக்கமளிக்கவும், கற்பிக்கவும் அறிவியல் ரீதியான சிறந்த தொடர்பாளர்களைக் கண்டறியும் குறிக்கோளைக் கொண்டுள்ளது.

கல்வி ரீதியான சொற்பொழிவு போட்டியில் பங்கேற்கும் சொற்பொழிவுகள் அதிகபட்சம் 10 நிமிடங்கள் நடைபெற வேண்டும்.

சொற்பொழிவு தலைப்புகள்

கல்வி ரீதியான சொற்பொழிவு போட்டியின் சொற்பொழிவு தலைப்புகள் முறையான, இயற்கை அல்லது சமூக அறிவியலின் தலைப்புகளில் இருக்க வேண்டும்.
கல்வி ரீதியான சொற்பொழிவுகள் என்பது முற்றிலும் தகவல்களை வழங்கக்கூடியதாக இருக்க வேண்டும் மற்றும் சக மதிப்பாய்வு செய்யப்பட்ட அறிவியலின் தற்போதைய நிலையை முன்வைக்க வேண்டும். உதாரணமாக, புவியீர்ப்பு எவ்வாறு செயல்படுகிறது, அல்லது நுண்ணுயிர் எதிர்ப்பிகள் எவ்வாறு செயல்படுகின்றன, அல்லது காலநிலை மாதிரிகள் எவ்வாறு செயல்படுகின்றன, அல்லது தொடக்கப் பள்ளியில் எந்த கல்வி அணுகுமுறை சிறந்தது, நிறுவப்பட்ட ஒருமித்த கருத்துப்படி ஏன் என தகவல்களை வழங்கக்கூடியதாக இருக்க வேண்டும்.

பல முறை போட்டியாளர்கள் குழப்பமடைந்து, ஏதாவது ஒரு விஷயத்தைப் பற்றி வற்புறுத்த முயற்சிக்கும் அல்லது ஒரு விஷயத்தில் போட்டியாளரின் கருத்தை முன்வைக்கும் சொற்பொழிவை முன்வைக்கின்றனர். இவை கல்வி ரீதியான நல்ல சொற்பொழிவுகளுக்கு அடையாளமல்ல.

போட்டியிடுபவர் ஒரு சிறந்த புகழ்பெற்ற ஆராய்ச்சியாளராக இல்லாதிருந்தால், அநேகமாக நிஜ உலகில் யாரும் ஒரு குறிப்பிட்ட அறிவியல் விஷயத்தில் அவர்களின் கருத்துக்களைப் பற்றி கவலைப்படுவதில்லை, அவர்கள் பெரும்பாலும் தவறாக இருக்கலாம். முந்தைய உதாரணத்தைத் தொடர்ந்து, காலநிலை மாற்றம் பற்றிய ஒரு சொற்பொழிவு அந்த விஷயத்தைப் பற்றிய சிறிய பகுதியை விளக்கலாம், ஒரு காலநிலை மாதிரி எவ்வாறு கட்டமைக்கப்படுகிறது, CO2 செறிவு எவ்வாறு அளவிடப்படுகிறது, கடந்த வளிமண்டலக் கலவையை ஆய்வு செய்ய பனியை எவ்வாறு தோண்டி எடுக்கிறோம், புவி வெப்பமடைதலின் விளைவுகள் என்ன, என்பன போன்ற சிறு சிறு பகுதியை விளக்கலாம். மேலும், அந்த மாடல்களைப் பற்றி போட்டியாளர், அவர் என்ன நினைக்கிறார், அவை துல்லியமானவையா இல்லையா அல்லது சரியா தவறா, அவருடைய நம்பிக்கை என்ன என்பதைப் பற்றி பேசாதீர்கள்.

போட்டியாளருக்கு மனதில் ஒரு சமூகப் பிரச்சனை ஓடிக்கொண்டு இருக்கும்போது, கல்வி ரீதியான சொற்பொழிவுக்கு பதிலாக தன்னுடைய கருத்துக்களை மக்களிடம் புகுத்தும் விதமாக சொற்பொழிவை வழங்க முயற்சிக்கும்போது இதே போன்ற பிழை ஏற்படுகிறது. உதாரணமாக, யாராவது ஒரு குறிப்பிட்ட பணவியல் கொள்கை அல்லது கல்வி அணுகுமுறையின் விளைவுகளை விளக்க ஆரம்பிக்கலாம், பின்னர் நுட்பமான முறையில் இந்த அணுகுமுறை ஏன் இலக்கு எக்ஸ்-ஐ (குறைந்த பணவீக்கம், சிறந்த கற்றல், எதுவாக இருந்தாலும்) அடைய ஏன் பயன்படுத்த வேண்டும் என்பதை தன்னுடைய கருத்துக்களை மக்களிடம் புகுத்தும் விதமாக சொல்ல முயற்சி செய்யலாம். மீண்டும், இது பேச்சாளரின் தனிப்பட்ட கருத்து/எண்ணங்களை வெளிப்படுத்தி வரம்பை மீறுகிறது. இவை நல்ல சமூக விழிப்புணர்வு சொற்பொழிவுகளாக இருக்கலாம் தவிர, கல்வி ரீதியான நல்ல சொற்பொழிவாக இருக்க முடியாது.

சொற்பொழிவு உள்ளடக்கம் அங்கீகரிக்கப்பட்ட சக மதிப்பாய்வு செய்யப்பட்ட பத்திரிகைகளில் வெளியிடும் செயலில் உள்ள விஞ்ஞான ஆராய்ச்சியாளர்களின் சமூகத்தால் புரிந்து கொள்ளப்பட்ட ஒப்புக்கொள்ளப்பட்ட அறிவியலுடன் ஒத்துப்போகக்கூடியதாக இருக்க வேண்டும்.

குறிப்பு: கல்வி ரீதியான சொற்பொழிவு போட்டியில் பங்கேற்கும் சொற்பொழிவுகள் பொது சொற்பொழிவு என்ற தலைப்பில் இருக்காது.

 

மேற்கண்ட அளவுகோல்களை பூர்த்தி செய்யாத சொற்பொழிவுகளை வழங்கும் போட்டியாளர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள்.

போலியான அறிவியல் தலைப்புகள் அல்லது வாதங்களின் ஏதேனும் குறிப்பு அல்லது பயன்பாடு போட்டியாளரின் தகுதிநீக்கத்திற்கு வழிவகுக்கும், போலி அறிவியலின் உட்பொருள் சொற்பொழிவின் மையமாக இருந்தாலும் (எ.கா. "ஜோதிடம் எவ்வாறு வேலை செய்கிறது") அல்லது அது அதன் ஆதரவான வாதத்தின் ஒரு பகுதியாக இருந்தாலும் (எ.கா. "புவி வெப்பமடைதலுக்கு ஒரு காரணம் யுரேனஸ் ரிஷப ராசியில் இருப்பது" என்று கூறுவது)

கல்வி ரீதியான சொற்பொழிவில் போலி அறிவியல் தோன்றக்கூடிய ஒரே சரியான சூழ்நிலை வரலாற்று அல்லது சமூக சூழலில், அந்த போலி அறிவியலை நம்பிய மூன்றாம் தரப்பினரின் நடத்தையை விளக்கும் விதமாக இருக்கலாம் என்பதுதான் (எ.கா: எட்வர்ட் VII தனது முடிசூட்டும் நாளைத் தீர்மானிக்க ஜோதிடத்தை எவ்வாறு பயன்படுத்தினார் என்பதை விளக்குவது)

 

நடுவர்களின் தேர்வு

நாடு மற்றும் அதற்கு மேல் மட்டங்களில் நடைபெறும் போட்டிகளுக்கு, நீதிபதிகள் பின்வரும் தொழில்களில் இருக்கும், Agora அல்லாத உறுப்பினர்களாக இருப்பார்கள்:

  • ஊடக வல்லுநர்கள் - தொலைக்காட்சி, வானொலி, பத்திரிகை அல்லது திரைப்படத் துறையிலிருந்து வர்ணனையாளர்கள், நிகழ்ச்சி தொகுப்பாளர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் போன்றோர்.
  • பள்ளி அல்லது பல்கலைக்கழக பேராசிரியர்கள்.
  • பத்திரிகையாளர்கள்.
  • நடுத்தர மற்றும் பெரிய நிறுவனங்களின் நிர்வாகிகள்.
  • தொழில்முறை (ஊதியத்திற்காக) பொது சொற்பொழிவாற்றும் நெட்வொர்க்கின் பேச்சாளர்கள்.
  • TEDx., மங்க் விவாதங்கள் போன்ற பிற பொது சொற்பொழிவாற்றும் நிகழ்ச்சிகளின் பேச்சாளர்கள்.

சொற்பொழிவுகளுக்கு மதிப்பெண் வழங்குவது

பின்வரும் அளவுகோல்களின்படி நீதிபதிகள் சொற்பொழிவுகளுக்கு மதிப்பெண் வழங்குவார்கள்:

  • தெளிவு மற்றும் கவனம் (0 முதல் 10 வரை) - சொற்பொழிவு தெளிவான, ஒற்றை கல்வி இலக்கை கொண்டிருந்தா என்பது கருத்தில் கொள்ளப்படும்.
    கருவிகள் அல்லது காட்சி உபகரணங்களின் பயன்பாடு (0 முதல் 10 வரை) - பயன்படுத்தப்படும் கருவிகள் அல்லது காட்சி உபகரணங்களின் பொருத்தம் மற்றும் அசல் தன்மை போன்ற விஷயங்கள் கருத்தில் கொள்ளப்படும்.
  • அறிவியல் ரீதியான துல்லியம் (0 முதல் 10 வரை) - பேசப்பட்ட விஷயம் குறித்த தற்போதைய அறிவியல் புரிதலுக்கு சொற்பொழிவு எவ்வளவு நெருக்கமாக இருந்தது என்பது கருத்தில் கொள்ளப்படும்.
  • பொது மக்களின் புரிதல் (0 முதல் 10 வரை) - பொது (பாமர) மக்களுக்கு சொற்பொழிவு எவ்வளவு புரிந்துக் கொள்ளும் விதத்தில் இருந்தது என்பது கருத்தில் கொள்ளப்படும்.
  • சொற்பொழிவின் பொதுத் தரம் மற்றும் ஆர்வம் (0 முதல் 10 வரை) - சொற்பொழிவு பொழுதுபோக்காக இருந்ததா, கேட்போரின் கவனத்தை கவர்ந்து, அதனை தக்கவைத்துக் கொள்ள முடிந்ததா என்பது போன்றவை கருத்தில் கொள்ளப்படும்.

ஒவ்வொரு சொற்பொழிவுக்கும், மேற்கூறிய மதிப்பெண்களின் சராசரி கணக்கிடப்படும், அதுவே அந்த போட்டியாளருக்கு வழங்கப்படும் இறுதி மதிப்பெண்ணாகும்.

தலைப்புகள்

உலக இறுதிப் போட்டியைத் தவிர வேறு ஏதேனும் மட்டத்தில் நடைபெறும் போட்டிகளில் வெற்றி பெறுபவருக்கு " (பிராந்தியம்) -இன் கல்வி ரீதியான சிறந்த பேச்சாளர்" என்ற பட்டம் வழங்கப்படும்.

 


Contributors to this page: shahul.hamid.nachiyar and agora .
Page last modified on Saturday October 23, 2021 23:42:28 CEST by shahul.hamid.nachiyar.